அனைத்துக்கும் மன்னராம் இறைவா!
அடியாரைக் கண்ணோக்கி இரங்கும்.
அனைத்து நாடுகளும் உம்மீது
அச்சம் கொள்ளச் செய்தருளும்.
அடியாரைக் கண்ணோக்கி இரங்கும்.
அனைத்து நாடுகளும் உம்மீது
அச்சம் கொள்ளச் செய்தருளும்.
அநீதியின் நாட்டிற்கு எதிராய்
ஆற்றல்மிகு உம்கரம் உயர்த்தும்.
அநீதியால் உம்மக்களை அவர்கள்
அடக்கி ஒடுக்க நினைக்கின்றனர்.
உம்வலிமை அவர்கள் காணட்டும்
உம்தூய்மை அவர்கள் முன்னிலை
எம்வழியாய் காட்டியதுபோல் உம்மாட்சி
எம்முன்னிலை அவர்கள்வழிக் காட்டும்.
உம்மையன்றி பிறகடவுள் இல்லையென
உண்மை நாங்கள் அறிந்ததுபோல்
உம்மை அவர்களும் அறியட்டும்.
உம்கை வலக்கை மாண்புறட்டும்
புதியபல அடையாளம் வழங்கும்
புதிரான செயல்களை நிகழ்த்தும்
எதிரியும் பகைவரும் ஒழியும்
எரியும்உம் சீற்றத்தைப் பொழியும்
காலத்தை விரைவாக்கி உந்தன்
கட்டளை யாவும் நிறைவாக்கும்
குலத்தால் பிரிக்கும் மனிதரை
கொதிக்கும் தீக்கனல் விழுங்கட்டும்
உம்மடியார் தமக்கு தீங்கிழைப்போர்
உரியத் தண்டனை அடையட்டும்
எம்மைத்தவிர யாருளர் ஆண்டிட?
என்றுரைக்கும் பகைதலை நசுக்கும்
ஆபிரகாம் குலத்தை ஒன்றுசேரும்
ஆதியில்போல் அவர்களை உமது
சுவீகார மக்களாய் தேர்ந்தெடும்
சீயோன் எருசலேம் மகிழ்வதாக
உமது மாட்சியால் உம்மக்களை
உயர்த்தி இறைவாக்கு நிறைவேற
எமது பொறுமையான எதிர்பார்ப்புக்கு
ஏற்றதோர் பரிசினை அளித்திடும்.
உன்னதராம் கடவுளின் மாட்சிதனை
உலகம் அறிந்திட வேண்டும்.
சொன்ன இறைவாக்கு யாவும்
சோர்வின்றி நிகழ வேண்டும்.
உம்மிடம் கூக்குரலிடும் அடியவர்
உள்ளத்தை ஆய்ந்து அறியும்
எம்மிடம் இரங்கி வேண்டுதல்
ஏற்று எமக்குப்பதில் தாரும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக