வெள்ளி, 4 டிசம்பர், 2020

மோசமான தபால்காரர் (சிந்திக்க சிறுகதை)

என் சிறுவயதில் ஒரு புத்தகத்தில் படித்த கதை இது :

ஒரு ஏழை  மனிதன்  ஒருவன் வறுமையில் வாடினான். சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் யாரிடமும் கேட்பதற்கு வழி தெரியாமல் சாலையில்  நின்று கொண்டிருந்தார்.  அவ்வழியாக  இலவசமாக  விவிலியத்தை விநியோகித்து கொண்டு ஒரு சபையின் ஊழியர்  ஒருவர் வந்து கொண்டிருந்தார். வந்தவர் அந்த ஏழை மனிதனிடம் இலவசமாக விவிலியத்தை  கையில் கொடுத்தார். அவர் சென்றபின், அந்த ஏழைமனிதன், "இதை கொடுப்பதற்கு பதிலாக பணம் கொடுத்திருந்தால் நல்லா இருந்திருக்கும்." என்று வருத்தப்பட்டுக்  கொண்டான். பிறகு வீட்டுக்கு வந்து  மேலோட்டமாக விவிலியத்தை புரட்டிப் பார்த்தான்.  ஒரு பக்கத்தில் "கேளுங்கள்;  உங்களுக்குக்  கொடுக்கப்படும்."  என்று எழுதி  இருந்தது.  தன்னிடம் இருந்த பதினைந்து காசை எடுத்துக்கொண்டு பக்கத்தில் உள்ள ஒரு தபால் அலுவலகத்திற்கு சென்று  ஒரு அஞ்சல் அட்டையை வாங்கிவந்தான்.  அதில், "கடவுள், சொர்க்கம்"   முகவரி இட்டு, "கடவுளே! நான்  ரொம்ப  கஷ்டப்படுறேன்.  எனக்கு நீங்க  ஒரு நூறு ரூபாய் அனுப்பினால் அதை வைத்து கொண்டு  நான் பிழைத்துக்  கொள்வேன்." என்று எழுதி இருந்தான்.  அஞ்சல் அட்டையை தபால் பெட்டியில் போட்டு விட்டு வந்து விட்டான். முகவரியை பார்த்த அஞ்சல்  அலுவலர்  அந்த பகுதியின் தபால்காரரிடம் கொடுத்து அந்த ஏழைமனிதனிடம் அந்த அஞ்சல் அட்டையை  திருப்பி கொடுக்கச் சொன்னார். வாசித்து பார்த்த  அந்த தபால்காரரின் மனம் இளகியது. தன்னிடம்  இருந்த சிறிய பணத்தையும் பிறரிடம் இருந்து சேர்த்த பணத்தையும் சேர்த்து  மொத்தம் 75 ரூபாய் தேறியது . பணத்தை மணி ஆர்டர் செய்வதற்கான பணத்தையும் தபால் காரர் ஏற்றுக்கொண்டு அந்த ஏழையிடம் கடவுளிடமிருந்து பணம் வந்திருக்கின்றது என்று சொல்லி ரூபாய் 75ஐ அந்த ஏழையிடம் கொடுத்தார். வாங்கி கொண்ட ஏழைக்கு மனது சந்தோசம் ஆனாலும் முகத்தில்  ஒரு வருத்தம்.  மீண்டும்  அந்த  ஏழையிடமிருந்து தபால் அலுவலகத்திற்கு, "கடவுள், சொர்க்கம்" என்ற விலாசமிட்டு ஒரு அஞ்சல் அட்டை வந்தது. அதில் , "கடவுளே ! என்னுடைய கடிதத்தை பார்த்து நீங்கள்  பணம் அனுப்பி இருந்தீர்கள்.  ரொம்ப  நன்றி. ஆனால், நீங்கள் அனுப்பிய நூறு ரூபாய் பணத்தில் எங்கள் பகுதியில் உள்ள இந்த மோசமான தபால்காரர் ரூபாய் 25 எடுத்து கொண்டு எனக்கு 75 ரூபாய் மட்டும் தந்தார். எனவே, அவர் எடுத்து கொள்ளும் பணத்தையும் சேர்த்து எனக்கு ரூபாய் 50 உடனே அனுப்பி வைக்கவும்."  படித்த தபால் காரருக்கு தலையே சுற்றியது. 

நமது ஜெபங்களும் இப்படி பல நேரங்களில் இருக்கின்றது.



கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...