நான் நிரந்தரம் அல்ல
நாளை நடப்பது நானறியேன்
தான் என்பது தற்காலிகமே
தன்னை நான் உணரும்வரை
நாளை நடப்பது நானறியேன்
தான் என்பது தற்காலிகமே
தன்னை நான் உணரும்வரை
நேற்றுவரை நடந்த யாவும்
நிகழும் இந்நொடி மட்டும்
வெற்றுடலை மண் மூடும்வரை
வேளையும் வேலையும் எனதில்லை
படைத்தவர் எனைக் காணும்மட்டும்
பாரினில் நானொரு பாத்திரமே
கிடைத்த இவ்வாழ்வில் எனக்கு
காலமும் காரியமும் சொந்தமல்ல
என்னறிவு நம்பியவன் ஒருபொழுது
என்திறனை சார்ந்தும் ஒருபொழுது
பின்னை பலநான் உணர்ந்தபொழுது
பிழைத்தது இறைவனால் என்றறிவேன்
என்னால் ஆனமட்டும் முயன்றேன்
என்பலம் என்னவென்று உணர்த்த
சொன்னால் விளங்கா அளவென்று
சோதித்து அறிய முற்பட்டேன்
ஒருதிசை நானும் பயணிக்க
ஓயும்வரை கடக்க நினைத்தேன்
மறுதிசை என்பயணம் இறைவன்
மாற்றிய போதும் மங்கவில்லை
திசைகள் மாறிமாறியே நானும்
தினமும் பயணம் செய்கின்றேன்
ஆசைகள் யாவும் அறுபட்டு
அடங்கினேன் அவர் விருப்பமாய்
இலட்சியம் எனக்கு யாதென்று
இதுவரை நானும் அறிந்ததில்லை
அலட்சியம் எனமனிதர் சொல்கையில்
ஆண்டவர் சொல்தனில் காத்திருப்பேன்
எதிர்காலம் பற்றிநான் சிந்திக்க
என்னையே நான் படைக்கவில்லை
முதிர்வயது மட்டும் என்வாழ்வை
முழுதாய் வடித்தவர் அவரன்றோ
காலங்கள் பலவும் வாழ்ந்திட்டேன்
கடந்துப் போகும் காண்பெதெலாம்
பலங்கொண்ட மனிதரும் வாழ்வில்
பாதியில் வீழ்ந்திடக் கண்டேன்
கடந்த நாட்கள் அனைத்தும்
காத்தவர் கருணை கிடைத்திருக்க
நடந்துப் போகும் இந்நாளும்
நாளையும் கருணைக் காட்டாரோ?
இனியும்என் வாழ்வு மட்டில்
இறைவனைத் தவிர யாருண்டு?
கனியும் அவர்தம் திருவுளம்வரை
காத்திருப்பேன் அவர் ஆணைக்காய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக