மதமாற்றமும், அதை விதைக்க எழுந்த சமூக வன்முறைகளும் அதனால்
இந்தியாவில் ஏற்பட்ட பல்வேறு அரசியல் மாற்றங்களும் இந்திய
வரலாற்றிலும் சரி, இந்திய அரசியலிலும் 3000 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு தாக்கத்தை
ஏற்படுத்தி உள்ளது யாவரும் அறிந்த உண்மை. உண்மையில் இந்த மதமாற்ற சர்ச்சைகள்
மதத்தினால் உண்டானவை அன்று மாறாக, அதிகாரத்தை கையில் வைத்துக்கொள்ள நினைக்கும் இனவாத, ஜாதியவாத
குழுக்களின் இடையில் நடைபெற்ற ஒரு ஆதிக்க போராகவே இருந்துள்ளது.
வேதகாலமும் திராவிடமும் பௌத்தமும் சமணமும்
கி.மு. 1250 ஆண்டுக்கு முன்பாக இந்திய துணைக்கண்டம் என்று அழைக்கப்படும் இந்த
பிராந்தியத்தில் பல்வேறு வகையான இனக்குழுக்கள் பல்வேறு வகையான வழிபாட்டு முறைகளை
கடைபிடித்து வந்துள்ளனர். இதில் பலர் இயற்கை வழிபாடு, மூதாதையர்
வழிபாடு மற்றும் உருவமில்லா வழிபாடு என பலவகைகளில் வழிபாட்டு முறைகள் இருந்தன.
அப்போது மதம் என்ற கோட்பாடு இங்கு உருவாகவில்லை. ஆனால் கி.மு.1250 - கி.மு.650 என்ற
காலகட்டத்தில் மேற்காசியாவில் (குறிப்பாக பெர்சியா, மெசபடோமியா,
கப்பத்தோக்கியா) இருந்து கால்நடைகளுடன் இடம்பெயர்ந்து வந்த ஆரியர்கள்
சிந்து சமவெளி பகுதிகளிலும், மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேஷத்தின் சில பகுதிகளிலும் வந்து
குடியேறினர். அவர்களுக்கும் ஏற்கனவே இருந்த பூர்வகுடிகளுக்கும் பல்வேறு மோதல்கள்
நிகழ்ந்தன. இதில் கலாச்சார மோதல்களும் இடம்பெற்றன. குடிபெயர்ந்த ஆரியர்கள்
கல்வியறிவு, தந்திரத்தில் மேம்பட்டவர்கள். நாளடைவில் திருமணங்கள், வேள்விகள்
மற்றும் பல கதைகள் மூலம் இருந்த பூர்வகுடிகளை தங்கள் வசப்படுத்தி அவர்களின் மீது
தங்கள் கலாச்சாரத்தை திணித்தனர். இந்த காலம் தான் வேதகாலம் என்று அழைக்கப்பட்டது.
அவர்களின் பல கதைகளில் ஆரியர்கள் கதாநாயகர்களாகவும், பூர்வகுடிகள்
வில்லன்களாகவும் சித்தரிக்கப்பட்டனர்.
அந்த காலகட்டங்களில் இந்தியாவின் தென் பகுதிகளில் அவர்கள் ஆதிக்கம்
செலுத்தவில்லை. பின்பு அவர்களுக்குள் இனக்குழு பிரச்னை உருவாகி சைவம், வைணவம்,
கௌமாரம் என பல பிரிவுகள் உண்டாகின. இதில் வைணவம் பலமுறை சைவத்தை
கூண்டோடு அழிக்க நினைக்க, சைவத்திற்கும்,
வைணவத்திற்கும் பல்வேறு மோதல்கள், போர்கள்
உண்டாகி ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக் கணக்கான
மக்கள் இறந்து போயினர். இந்நிலையில் கெளதம புத்தரால் தோற்றுவிக்கப்பட்ட புத்தமதம்
கி.மு. 563 - 480 இல் இந்தியாவில் வளரத் தொடங்கியது. இதே சமகாலத்தில் மகாவீரரின்
சமணமதமும் வளரத் தொடங்கியது. இந்த இரண்டு சமயங்களில் உள்ள
அமைதி மற்றும் அஹிம்சை நெறிகள் பலரை கவர்ந்திழுக்க, பல
சைவர்கள், பூர்வகுடிகள் புத்தமத்தையும், சமண மதத்தையும் தழுவினர். கி.மு. 368
- கி.பி. 2ம் நூற்றாண்டு வரை இந்தியாவில் வைணவம், சைவத்தை
விட பௌத்தமும், சமணமும் செழித்து வளர்ந்தன. கி.பி. 2ம்
நூற்றாண்டிற்கு பிறகு இதை பொறுத்துக்கொள்ள முடியாத வைணவர்களும், சைவர்களும்
ஒன்றாய் சேர்ந்து கொண்டு, பௌத்த மற்றும் சமண மதத்தினர் மீது வன்முறையை
கட்டவிழ்த்தனர். இதில் லட்சக்கணக்கான பௌத்தர்களும், சமணர்களும்
கொல்லப்பட்டனர். அவர்களுக்கு அஞ்சி மீண்டும் பலர் சைவத்திற்கும்
வைணவத்திற்கும் திரும்பினர். இந்த காலகட்டம் வரை, தென்பகுதிகளில்
திராவிட வழிபாட்டு முறைகளும், பௌத்தமும், சமணமும் மட்டுமே இருந்தன. கி.பி. 4ம்
நூற்றாண்டில் அதாவது கி.பி. 319 - 467 வரை இருந்த குப்த பேரரசு (பிராமண
ஆளுகை) உருவாகி அதில் வைணவர்களும், சைவர்களும் உள்ளடக்கிய ஆரிய ஆதிக்கம் நிலவியது. பிராமணர் அல்லாதவர்கள்
நசுக்கப்பட்டனர். பௌத்தமும், சமணமும்
ஒடுக்கப்பட்டன. இந்த காலகட்டத்தில் பல காப்பியங்கள் எழுதப்பட்டு, பல
முந்தைய வரலாற்று சான்றுகள் அழிக்கப்பட்டன. இன்றுவரை இந்த குப்தபேரரசே இந்தியாவின்
பொற்காலம் என பிராமணர்களால் மாற்றி எழுதப்பட்டது. இந்திய வரலாற்றில் கூட இன்றுவரை
கல்வியில் சிறந்த காலம் என்று மத்திய அரசின் பல்வேறு
பாடத்திட்டங்களில் வைத்துள்ளனர். கி.பி.600 வரை
குப்தபேரரரசின் தாக்கம் வடஇந்தியாவில் பரவி தென்னிந்தியா வரை
எட்டியது. அப்போது தென்பகுதியில் ஆட்சியில் இருந்த சோழர்களுக்கும் இவர்களுக்கும்
பல வர்த்தக, கலாச்சார உறவுகள் இருந்தன. அவர்களின் கலாச்சாரமும்,
கதைகளும், வேள்வி முறைகள், சம்பிரதாய, சடங்குகள் என பல
விஷயங்கள் சோழர்களுக்கு பிடித்துவிட, சோழமன்னர்கள் தங்கள் பேரரசில்
அவர்களை சேர்த்துக்கொண்டு அவர்கள் கலாச்சாரத்தை பரப்ப அனுமதித்தனர்.
இங்கிருந்த பூர்வகுடி திராவிடர்கள், பௌத்தர்கள் என பலர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர்.
மறுத்தவர்கள் வாளுக்கு இரையானார்கள். சோழர்கள் தங்கள்
போர்த்திரத்தினால் கடாரம், தெற்காசிய நாடுகள் வரை இந்த கலாச்சாரத்தை எடுத்து சென்றார்கள். பின்பு மாறி மாறி
கி.பி.1279 வரை வடக்கிலும் தெற்கிலும் ராஷ்டிரகுட்ட, பாலா,சாலுக்கிய,
பல்லவ, சோழா,
களப்பிரர், விஜயநகர என பல அரசுகள் வந்து முடிந்த பின், கி.பி.14ம்
நூற்றாண்டில் அதாவது கி.பி.1302க்கு பிறகு
வடக்கே இஸ்லாமிய படையெடுப்பு, தெற்கே விஜயநகர பேரரசு என ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. இதில் ஆங்காங்கே குறுநில மன்னர்களும்,
சமஸ்தானங்களும், ஜமீன்களும் இருந்து வந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக