இஸ்லாமிய படையெடுப்பு, அதற்கு பிறகு கி.பி. 1206-1290 இல் வந்த குத்புதீன் ஐபக் அடிமை சாம்ராஜ்யம், கி.பி.1290-1320 இல் வந்த ஜலாலுதீன் கில்ஜியின் கில்ஜி
பேரரசு, கி.பி. 1320-1414 இல் வந்த கியாசுதீனின் துக்ளக் பேரரசு, கி.பி. 1451 - 1526 இல் வந்த பஹலோல் லோதியின் பேரரசு
அதற்கு பிறகு வந்த முகலாய பேரரசு என அரசு மாற்றங்கள் நிகழ்ந்தன. இவற்றோடு இந்தியாவில் இஸ்லாம் புகுத்தப்பட்டது. அதன்பின் போர்த்துகீசியர்கள், டச்சுகாரர்கள், ஆங்கிலேயர் என ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. இஸ்லாம் மதமாற்றம், கிறிஸ்தவ மதமாற்றம் என இவற்றை
பற்றி விரிவாக பார்ப்பதற்கு முன் மதமாற்றத்தை பற்றிய என் புரிதலை, என் கருத்துக்களை எடுத்து வைக்க விரும்புகிறேன்.
மதமாற்றம் சரியா அல்லது தவறா?
இந்த பிரபஞ்சம், உலகம், உயிர்கள் என படைத்து நம்மைக் காத்து
வருவது நம் எண்ணங்களுக்கு, நம் அறிவுக்கு மேலான ஒரு மிக, மிக, மிக...... பிரமாண்டமான
சக்தி, அவர் ஒருவரே இறைவன், அவருக்கு மேலான
ஆற்றல் வேறு யாரிடமும் இருக்கமுடியாது என்று எல்லா மதத்தில்
உள்ளவர்களுக்கும் தெரியும். இந்த உலகமே அவர் பார்வையில் ஒரு தூசு என்றும், ஒருநொடி பொழுதில் இந்த உலகத்தையே அழிக்கும் வல்லமை கொண்டவர் கடவுள் என்றும் யாவரும் அறிவர். அவரையே நாம் இறைவன், கடவுள், ஆண்டவர், கர்த்தர், பரம்பொருள் என பல்வேறு பதங்களில் அழைக்கின்றோம். ஆதிக்க நோக்கம், வர்த்தக நோக்கத்திற்கு, தொழிலுக்கும், மனக்கண் விட்டு விலகி புறக்கண் வழியாக வழிபாடு (பார்த்தால் தான் கடவுள் நம்பிக்கை வரும் என்ற அவநம்பிக்கை) என்ற சூழ்நிலையில் உருவானவை தான் கடவுளுக்கு உருவம் கொடுத்தலும், பெயர் கொடுப்பதும், அவதாரங்களை கொடுப்பதும் என்று உருவாகி இன்று மதங்களாகி நம்மை ஆட்டிவித்து கொண்டிருக்கின்றன. கடவுளை காப்பாற்ற மனிதர்கள் யார்? என்று மனிதர்களுக்கு தெரிந்திருந்தாலும், தங்கள் ஆதிக்கத்தை பிறர் மீது திணிக்க இனக்குழுவாக தங்கள் மதங்களை பயன்படுத்தி அதை காத்துக்கொள்ள மனிதர்கள் போராடி வருகின்றனர். மதத்தின் பெயரால், கடவுள் படைத்த பிற மனிதர்களை கடவுள் பெயராலே வேட்டையாடும் இம்மனிதர்களுக்கு உண்மையிலே கடவுள் நம்பிக்கை இருப்பதில்லை மாறாக இவர்கள் மதத்தின் மூலம் தங்களையே கடவுளாக்கி கடவுளுக்கு எதிராகவே நிற்கின்றனர். உன்னைக் காக்கும் கடவுளை நீ காப்பாற்ற முயலுகிறாயா? என்ன ஒரு மூடத்தனம்.
மதம் மூலம்
ஆதிக்கம் செலுத்தும் ஒரு தந்திர நோக்கம். வியாபார, வர்த்தக நோக்கம், அரசியல் நோக்கம். கடவுளுக்கு
மனிதர்களாய் இருப்பது தான் தேவையேயொழிய, மதத்தின்
பெயரால் மிருகங்களாக மாறுவதை கடவுள் விரும்புவாரா. மதவெறி என்பது ஒரு இனக்குழு
வெறி. ஆதிக்க வெறி. மனிதர்களை அடிமைப்படுத்த சூழ்ச்சி. என்னை பொறுத்தவரை மதம் என்பதே தேவை இல்லை என்றாலும், ஒவ்வொருவனும் தன் விருப்பத்திற்கு ஏற்ப வழிபாட்டு, சம்பிரதாய சடங்குகளை பின்தொடர்வதில் அல்லது மாற்றிக்கொள்வதில் எந்த
தவறும் இல்லை. அதே நேரத்தில், கடவுள் எந்த ஒரு மதத்திற்கும் அல்லது
மத அமைப்புகளுக்கும் அல்லது எந்த தனிநபருக்கும் "தன்னுடைய பிரநிதியாக"
அங்கீகாரம் கொடுக்கவில்லை. மதத்தின் பெயரால் கூட்டம் சேர்த்து, கொடிபிடித்து அதிகமான உறுப்பினர்களை சேர்ப்பதற்கு கடவுள் என்ன அரசியல் கட்சியா நடத்துகிறார்? ஒருவரை எந்த வகையிலும் மதமாற்ற நினைப்பது தவறானது என்றே நான் கருதுவேன். ஒருவன் எப்படி இருக்க வேண்டும் என்பதை கடவுள் அவன் பிறப்பதற்கு முன்பே குறித்து
விட்டார். ஆனால் மதத்தில் உள்ள உயரிய கோட்பாடுகளை, அன்பை, சமத்துவத்தை, எல்லாருக்குமான ஒரு சமநீதியை ஒடுக்கப்பட்ட இன்னொரு மதத்தவரிடம் கொண்டு செல்வது என்பது தேவையானது. இதை தடுக்க நினைப்பது அந்த மதத்தில் உள்ள ஆதிக்க மனப்பான்மை கொண்ட குறுக்குபுத்தி கொண்ட மேலாதிக்க வர்க்கம். இதை அவர்கள் மதமாற்றம் என்று மடைமாற்றி மதத்துவேஷத்தை பரப்பி
தங்கள் மதத்தில் உள்ள ஒடுக்கப்பட்டவர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், சமூக அந்தஸ்திலும் உரிமைகள் கிடைக்காதபடி செய்யும் உள்நோக்கம். இப்படி கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், ஆட்சி, அதிகாரத்திலும் அவர்களே கோலோச்ச வேண்டும் என்ற ஒரு குறுகிய பார்வை மட்டுமில்ல, இது இந்திய வரலாற்றில் பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்து வரும் ஒரு சதித்திட்டம் மற்றும் மறைமுக ஏற்பாடு.
ஒரு ஒடுக்கப்பட்ட மனிதனின், ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வாழ்க்கையில் இந்த மதமாற்றம் மூலம் ஒரு சமத்துவம், பொதுநீதி, சமூகநீதி, வாழ்வியல் மாற்றங்கள் ஏற்படுமானால் அந்த மதமாற்றத்தை நாம் மனதார வரவேற்க வேண்டும் ஜனநாயகத்தில் அதை தடுப்பதற்கு எந்த தனிநபருக்கோ, எந்த மதக்குழுவிற்கோ, இனக்குழுவிற்கோ, அதிகாரிகளுக்கோ, ஏன் ஒரு அரசுக்கோ அதிகாரம் அல்லது உரிமை இல்லை. மதமாற்றங்கள் உணர்வு மற்றும் நம்பிக்கை ரீதியாக நடக்ககூடியது. அதை மடைமாற்ற நினைத்தால் சமூகத்தில் அது பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தும்.
அதற்கு பிறகு வந்த முகலாய பேரரசு என அரசு மாற்றங்கள் நிகழ்ந்தன. இவற்றோடு இந்தியாவில் இஸ்லாம் புகுத்தப்பட்டது. அதன்பின் போர்த்துகீசியர்கள், டச்சுகாரர்கள், ஆங்கிலேயர் என ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. இஸ்லாம் மதமாற்றம், கிறிஸ்தவ மதமாற்றம் என இவற்றை
பற்றி விரிவாக பார்ப்பதற்கு முன் மதமாற்றத்தை பற்றிய என் புரிதலை, என் கருத்துக்களை எடுத்து வைக்க விரும்புகிறேன்.
உள்ளவர்களுக்கும் தெரியும். இந்த உலகமே அவர் பார்வையில் ஒரு தூசு என்றும், ஒருநொடி பொழுதில் இந்த உலகத்தையே அழிக்கும் வல்லமை கொண்டவர் கடவுள் என்றும் யாவரும் அறிவர். அவரையே நாம் இறைவன், கடவுள், ஆண்டவர், கர்த்தர், பரம்பொருள் என பல்வேறு பதங்களில் அழைக்கின்றோம். ஆதிக்க நோக்கம், வர்த்தக நோக்கத்திற்கு, தொழிலுக்கும், மனக்கண் விட்டு விலகி புறக்கண் வழியாக வழிபாடு (பார்த்தால் தான் கடவுள் நம்பிக்கை வரும் என்ற அவநம்பிக்கை) என்ற சூழ்நிலையில் உருவானவை தான் கடவுளுக்கு உருவம் கொடுத்தலும், பெயர் கொடுப்பதும், அவதாரங்களை கொடுப்பதும் என்று உருவாகி இன்று மதங்களாகி நம்மை ஆட்டிவித்து கொண்டிருக்கின்றன. கடவுளை காப்பாற்ற மனிதர்கள் யார்? என்று மனிதர்களுக்கு தெரிந்திருந்தாலும், தங்கள் ஆதிக்கத்தை பிறர் மீது திணிக்க இனக்குழுவாக தங்கள் மதங்களை பயன்படுத்தி அதை காத்துக்கொள்ள மனிதர்கள் போராடி வருகின்றனர். மதத்தின் பெயரால், கடவுள் படைத்த பிற மனிதர்களை கடவுள் பெயராலே வேட்டையாடும் இம்மனிதர்களுக்கு உண்மையிலே கடவுள் நம்பிக்கை இருப்பதில்லை மாறாக இவர்கள் மதத்தின் மூலம் தங்களையே கடவுளாக்கி கடவுளுக்கு எதிராகவே நிற்கின்றனர். உன்னைக் காக்கும் கடவுளை நீ காப்பாற்ற முயலுகிறாயா? என்ன ஒரு மூடத்தனம்.
அங்கீகாரம் கொடுக்கவில்லை. மதத்தின் பெயரால் கூட்டம் சேர்த்து, கொடிபிடித்து அதிகமான உறுப்பினர்களை சேர்ப்பதற்கு கடவுள் என்ன அரசியல் கட்சியா நடத்துகிறார்? ஒருவரை எந்த வகையிலும் மதமாற்ற நினைப்பது தவறானது என்றே நான் கருதுவேன். ஒருவன் எப்படி இருக்க வேண்டும் என்பதை கடவுள் அவன் பிறப்பதற்கு முன்பே குறித்து
விட்டார். ஆனால் மதத்தில் உள்ள உயரிய கோட்பாடுகளை, அன்பை, சமத்துவத்தை, எல்லாருக்குமான ஒரு சமநீதியை ஒடுக்கப்பட்ட இன்னொரு மதத்தவரிடம் கொண்டு செல்வது என்பது தேவையானது. இதை தடுக்க நினைப்பது அந்த மதத்தில் உள்ள ஆதிக்க மனப்பான்மை கொண்ட குறுக்குபுத்தி கொண்ட மேலாதிக்க வர்க்கம். இதை அவர்கள் மதமாற்றம் என்று மடைமாற்றி மதத்துவேஷத்தை பரப்பி
தங்கள் மதத்தில் உள்ள ஒடுக்கப்பட்டவர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், சமூக அந்தஸ்திலும் உரிமைகள் கிடைக்காதபடி செய்யும் உள்நோக்கம். இப்படி கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், ஆட்சி, அதிகாரத்திலும் அவர்களே கோலோச்ச வேண்டும் என்ற ஒரு குறுகிய பார்வை மட்டுமில்ல, இது இந்திய வரலாற்றில் பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்து வரும் ஒரு சதித்திட்டம் மற்றும் மறைமுக ஏற்பாடு.
ஒரு ஒடுக்கப்பட்ட மனிதனின், ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வாழ்க்கையில் இந்த மதமாற்றம் மூலம் ஒரு சமத்துவம், பொதுநீதி, சமூகநீதி, வாழ்வியல் மாற்றங்கள் ஏற்படுமானால் அந்த மதமாற்றத்தை நாம் மனதார வரவேற்க வேண்டும் ஜனநாயகத்தில் அதை தடுப்பதற்கு எந்த தனிநபருக்கோ, எந்த மதக்குழுவிற்கோ, இனக்குழுவிற்கோ, அதிகாரிகளுக்கோ, ஏன் ஒரு அரசுக்கோ அதிகாரம் அல்லது உரிமை இல்லை. மதமாற்றங்கள் உணர்வு மற்றும் நம்பிக்கை ரீதியாக நடக்ககூடியது. அதை மடைமாற்ற நினைத்தால் சமூகத்தில் அது பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக