இல்லாதான் நோக்கி அவர்தம் இல்லாமை
இல்லாது நீக்கும்நல் அரசு
இல்லாது நீக்கும்நல் அரசு
தலைவனென் பானவன் தன்குடி வறியோன்
தன்மை அணிந்து உணர்
முறையிலா செல்வம் ஈட்டலின் தலைவன்
இறையிலா அவ்வழியும் நாடு
செல்லரிக்கும் அரிப்புழு மேலென்ப ஆளுநன்
செல்வர்க்கே செல்வம் சேர்த்து
துறவிபோல் தன்னை நீக்கிதன் குடிமக்கள்
இறைவிபோல் காண்ப அமைச்சு
பொய்யுரை மிகைமை புரட்டு மிகும்நாடு
மெய்யுரை கூறா தலைவ
தன்னுறவு தன்சுற்றம் மேற்கருதி ஆள்பவன்
தானொப்பக் கொடிது இல.
கேட்பவை யாவும் கேட்பின் கேண்மை
கெட்டவை சேர்த்து சொலும்
கண்டான் அதனினும் செய்தல் நல்லது
ஆண்டான் நற்செயல் கண்டு
கள்ளமை களவுகபடு கடவாமை நீக்கி
காப்பான் வல்ல அரசு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக